முக்கிய செய்திகள்:
கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: மத்திய அரசு

கச்சத்தீவை மீட்கக்கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “இந்தியா கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கவில்லை.1974ல் கடல் எல்லையை வரையறை செய்தபோதே கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது. இலங்கையுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது.

கச்சத்தீவை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை. கச்சத்தீவு தொடர்பான கருணாநிதியின் மனுவில் பொதுநலன் இருப்பதாக தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

 

 

மேலும் செய்திகள்