முக்கிய செய்திகள்:
லாபம் அனைத்தையும் சம்பளமாக கொடுக்க முடியாது: மத்திய நிதி மந்திரி

சம்பள உயர்வை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 78வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வங்கி ஊழியர்களின் போராட்டம் குறித்து கூறியதாவது:-

லாபம் அனைத்தையும் பங்குகளுக்கான ஆதாயம் வழங்கவும், வங்கி ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தி வழங்கவும் பயன்படுத்த முடியாது.லாபத்தின் குறிப்பிட்ட தொகை வங்கிகளுக்கு அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தேவைப்படும் மூலதனத்தை அதிகரிப்பதற்கும், வங்கிகளை நடத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும்.

மூலதனம் இருந்தால் மட்டுமே வங்கிகள் தங்கள் பங்குதாரர்களுக்கு பங்காதாயங்களை வழங்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

 

மேலும் செய்திகள்