முக்கிய செய்திகள்:
காங்கிரஸ் தலைவர்கள் நீக்கம்

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது.காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரசார குழுவுக்கு பொறுப்பு ஏற்று பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சில மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களின் செயல் பாடுகள் திருப்தியாக இல்லை என்று புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து மாநிலம் வாரியாக காங்கிரஸ் நிர்வாகிகளை சோனியா ஆய்வு செய்து வந்தார்.

இன்று அவர் மேற்கு வங்காளம், அரியானா, கேரளா ஆகிய 3 மாநில காங்கிரஸ் தலைவர்களை பதவியில் இருந்து நீக்கினார். அந்த இடங்களுக்கு புதியவர்களை சோனியா நியமித்துள்ளார்.மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவராக சுதீர் ரஞ்சன் சவுத்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா மாநில காங்கிரஸ் தலைவராக அசோக் தன்வார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலத்துக்கு வி.எம்.சுதீரனை தலைவராக நியமனம் செய்து சோனியா ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து அகில இந்திய அமைப்பிலும் சில மாற்றங்களை சோனியா அதிரடியாக செய்வார் என்று கூறப்படுகிறது.

 

மேலும் செய்திகள்