முக்கிய செய்திகள்:
பாராளுமன்றத்தின் பணியை உணர்ந்து உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்:பிரணாப்முகர்ஜி

பாராளுமன்றத்தில் இன்று நடந்த ஒரு நிகழ்வில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் எம்.பி.க்களுக்கு வேண்டுகோள் விடுத்து கூறியதாவது,புனித கங்கையின் பிறப்பிடமாக கங்கோத்ரி உள்ளது. அது போல ஜனநாயகத்தின் பிறப்பிடமாக பாராளுமன்றம் இருக்கிறது.

கங்கோத்ரி மாசு அடைந்தால், புனித கங்கையும் மாசு பெற்று விடும். பிறகு அதை ஒரு போதும் சுத்தப்படுத்தவே முடியாது. அது போல பாராளுமன்றத்தின் பணியை உணர்ந்து உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்.பாராளுமன்றத்தின் பணியே விவாதிப்பதும், முடிவு செய்வதும் ஆகும். அந்த பணியை சீர் குலைத்து முடக்கக் கூடாது.

எல்லா எம்.பி.க்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையை உணரவேண்டும். எனவே பாராளுமன்ற விதிகளை பின்பற்ற வேண்டும். பாராளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கு வதை கைவிட வேண்டும்.இவ்வாறு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கூறினார்.

 

மேலும் செய்திகள்