முக்கிய செய்திகள்:
காங்கிரஸ் கட்சி சாதி, மதம் கடந்து செயல்படுகிறது: ராகுல்காந்தி பேச்சு

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்ற ராகுல்காந்தி ராஞ்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் பேசுகையில்,

தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது காங்கிரசில் வழக்கம் அல்ல. தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்று எம்.பி.க்கள் எல்லாரும் என்னை தேர்ந்து எடுத்தால் பிரதமர் பதவியை ஏற்க தயாராக உள்ளேன்’’ என்றார்.பிரதமர் மன்மோகன்சிங் மீது எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய் கிறார்கள். ஆனால் அவர் மிகச் சிறந்த பிரதமர்.

இன்னும் சில ஆண்டுகள் கழித்து தகவல் அறியும் சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், நில சீர்திருத்தச் சட்டம் போன்ற சட்டங்கள் பேசப்படும். அப்போது தான் இதற்கு காரணமானவர் மன் மோகன்சிங் என்பது தெரிய வரும்.அவரது 10 ஆண்டு ஆட்சியில் இந்த நாடு ஏராளமான நன்மைகளை பெற்றுள்ளது. அவர் பல தொலை நோக்கு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.காங்கிரஸ் கட்சி சாதி, மதம் கடந்து செயல்படுகிறது. நாம் இந்தியர்கள் என்ற கோஷத்துடன் செயல்படுகிறோம்.எனவே மதவாத சக்திகள் யார் என்பதை புரிந்து கொண்டு, அவர்களிடம் இருந்து மக்கள் விலகி நிற்க வேண்டும்.இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்

 

மேலும் செய்திகள்