முக்கிய செய்திகள்:
சமாஜ்வாடியின் மோசமான ஆட்சியை நீக்க வேண்டும்:மாயாவதி வலியுறுத்தல்

உத்தர பிரதேசத்தில் கற்பழிப்புக்குள்ளான மதுராவைச் சேர்ந்த பெண் அவ்விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சென்றபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தாக்குதலில் அப்பெண்ணின் தாயார் படுகாயமடைந்தார்.

இச்சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேட்டியளித்த உ.பி. முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி கூறுகையில்,

"குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அராஜகவாதிகளின் ஆட்சியாகி விட்டது. இங்கு நடைபெறும் வன்முறை சம்பவங்களினால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மொராதாபாத்தில் மருத்துவர் ஒருவரின் வீடு சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டுள்ளது. எருமை மாடுகள் காணாமல் போனதால் அராஜகம் செய்து வரும் ஆளும்கட்சி அமைச்சர் ஆசம் கான் போன்றவர்கள் இம்மாநிலத்தில்தான் உள்ளனர்.

இங்கு நடைபெறும் சட்ட விரோத செயல்களால் மாநிலத்தின் நிலைமை மோசமாகி வருகிறது. எனவே இங்கு நடைபெறும் சமாஜ்வாடியின் மோசமான ஆட்சியை நீக்கிவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை இங்கு அமல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

 

மேலும் செய்திகள்