முக்கிய செய்திகள்:
ஷிமோகா தொகுதியில் எடியூரப்பா போட்டி

கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாரதீயஜனதா வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 21 பேர் பட்டியலுக்கு கட்சி மேலிடம் ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னாள் முதல்– மந்திரி எடியூரப்பா ஷிமோகா தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது எம்.பி. யாக உள்ள 18 பேர் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

முன்னாள் மந்திரியும் எடியூரப்பா ஆதரவாளருமான ஷோபா மைசூர் தொகுதியிலும், முன்னாள் துணை முதல்–மந்திரி ஆர்.அசோகா பெங்களூர் வடக்கு தொகுதியிலும், தற்போதைய எம்.பி. சந்திரகவுடா பெங்களூர் தெற்கு தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

 

மேலும் செய்திகள்