முக்கிய செய்திகள்:
ராகுல்காந்தி வீடு முன்பு போராட்டம்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் பேட்டியளித்த போது 1984 ம் ஆண்டு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து பேசினார். இது சீக்கியர்களிடம் அதிருப்தியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.1984 ம் ஆண்டு டெல்லியில் கலவரம் ஏற்பட்ட போது ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அந்த கலவரத்தை தூண்டி விட்ட காங்கிரஸ்காரர்கள் யார் என்ற தகவலை வெளியிட வேண்டும் என்று சீக்கியர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

கடந்த வாரம் தொடங்கிய சீக்கியர்கள் போராட்டம் இன்றும் நீடித்தது. இன்று காலை நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் டெல்லியில் உள்ள ராகுல்காந்தி வீடு முன்பு திரண்டனர்.சீக்கியர்கள் படுகொலைக்கு காரணமானவர்கள் யார் என்று கோஷமிட்டப்படி அவர்கள் ராகுல் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

மேலும் செய்திகள்