முக்கிய செய்திகள்:
மத்திய பிரதேசத்தில் டைனோசரஸ் முட்டைகள் திருட்டு

கடந்த 2000 ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் மண்ணில் புதையுண்டு கிடந்த டைனோசரஸ் படிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுடன் சேர்த்து 27 டைனோசரஸ் முட்டைகளும் இருந்தன.அவற்றை கைப்பற்றிய ஆராய்ச்சியாளர்கள் மந்து அருகே அஷ்மேதாவில் உள்ள புதை படிவம் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். அவை விசேஷ கண்ணாடி பெட்டிகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அங்கிருந்த 27 டைனோசரஸ் முட்டைகளும் திடீரென மாயமாயின, அவற்றை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர்.இது குறித்து தார் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 498 மற்றும் 380 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக இருந்த வாட்ச்மேன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புனித படிவ பூங்கா பொறுப்பாளர் தர்மேந்திராமாவி ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார்.இந்த தகவலை தார் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயலாக்க அதிகாரி ஸ்ரீகாந்த் பனோத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகள்