முக்கிய செய்திகள்:
சென்னை தலைமை நீதிபதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகிறார்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அக்ரவால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆகிறார்.டெல்லி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 31 ஆக உள்ளது. இதில் இந்த ஆண்டில் 10 நீதிபதிகள் ஓய்வு பெறுகிறார்கள்.

நீதிபதி கோகலே மார்ச் மாதத்திலும், தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ஞானசுதா மிஸ்ரா ஏப்ரல் மாதத்திலும், நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மே மாதத்திலும் மற்றும் நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், நிஜ்ஜார், சவுகான், பிரசாத், ஆர்.எம்.லோதா, ரஞ்சனா தேசாய் ஆகியோர் அடுத்தடுத்த மாதங்களில் ஓய்வு பெறுகிறார்கள்.

இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள். தற்போது காலியாகும் இடங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி என்.வெங்கடரமணா ஆகியோர் பெயர்களை தலைமை நீதிபதி பி.சதாசிவம் சிபாரிசு செய்துள்ளார்.

சட்ட அமைச்சகம் இதை பரிந்துரை செய்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும். இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் நீதிபதிகள் நியமன அறிவிப்பு வெளியாகும்.தலைமை நீதிபதி பி.சதாசிவம் ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றதும் ஆர்.எம்.லோதா தலைமை நீதிபதியாகிறார். இவர் செப்டம்பர் மாதம் ஓய்வு பெறுவதால் 5 மாதங்களுக்கு தலைமை நீதிபதியாக இருப்பார்.

 

மேலும் செய்திகள்