முக்கிய செய்திகள்:
162 எம்.பி.க்களை எதிர்த்து வேட்பாளர்களை களம் இறக்கப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்

பாராளுமன்ற தேர்தலில் 350–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.இதற்காக மாநிலம் வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே சில பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. அந்த வேட்பாளர்கள் பற்றிய கருத்தை உடனே அனுப்பும் படி வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மி வேண்டுகோள் விடுத்துள்ளது.

வாக்காளர்கள் அளிக்கும் பதில் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்ந்து எடுக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. டெல்லியில் வடமேற்கு டெல்லி தொகுதி தவிர மற்ற 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.

மராட்டியத்தில் உள்ள 48 தொகுதிகளில் மும்பை, நாக்பூர், தானே, புனே, நாசிக் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.தற்போது பாராளுமன்றத்தில் உள்ள 543 எம்.பி.க்களில் 162 எம்.பி.க்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ளனர். இந்த 162 பேரையும் எதிர்த்து வேட்பாளர்களை களம் இறக்கப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.பிப்ரவரி முதல் வாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

 

மேலும் செய்திகள்