முக்கிய செய்திகள்:
9-ல் இருந்து 12 ஆக மானிய விலை சிலிண்டர்கள் அதிகரிப்பு

பொதுமக்களுக்கு மானிய விலையில் இப்போது ஆண்டுக்கு 9 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. இதனை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9-ல் இருந்து 12 ஆக அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.12 சிலிண்டர்கள் வழங்கும் திட்டம், பிப்ரவரி முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டால், 99.2 சதவீத வாடிக்கையாளர்கள் பயன் அடைவார்கள் என்றும்,மானியத்துக்கான செலவு ஆண்டுக்கு 80 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் வீரப்ப மொய்லி குறிப்பிட்டார்.

 

 

மேலும் செய்திகள்