முக்கிய செய்திகள்:
முப்படைகளும் பாசறை திரும்பின

டெல்லியில் இன்று குடியரசு தின கொண்டாட்ட நிறைவு விழா நடைபெற்றது. இதில், குடியரசு தின கொண்டாட்டங்களை நிறைவு பெறுவதை குறிக்கும், முப்படைகள் பாசறை திரும்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்களும் கம்பீரமாக அணிவகுத்து பாசறைக்கு திரும்பினர்.

இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்