முக்கிய செய்திகள்:
அந்தமான் படகு விபத்திற்கு கவச உடைகள் இல்லாததே காரணம்: நாராயணசாமி

அந்தமானில் நேற்று இரவு நடந்த படகு விபத்தில் 21 பேர் பலியானார்கள். 29 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து மத்திய இணை மந்திரி நாராயணசாமி கூறியதாவது:-

அந்தமானில் படகு மூழ்கி சுற்றுலாப் பயணிகள் இறந்த சம்பவம் மிகவும் சோகமானது; துரதிர்ஷ்டவசமானது. படகில் சென்றவர்களுக்கு உயிர்காக்கும் கவச உடைகள் (லைப் ஜாக்கெட்) மற்றும் பயணிகளை மீட்பதற்கான நீர்மூழ்கி வீரர்கள் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என்று தகவல் வந்துள்ளது.

படகில் பாதுகாவலர்களும் இல்லை. இதுகுறித்த முழுமையான விசாரணை நடத்தி, விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, “படகு மூழ்குவதற்கு முன் வெடிக்கும் சத்தம் கேட்டது. அருகில் மீன்பிடித்துக் கொண்டிந்தவர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர். ஆனால், மீட்புக் குழுவினரோ, ஒரு மணி நேரம் கழித்துதான் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்” என்று குற்றம்சாட்டினர்.

 

மேலும் செய்திகள்