முக்கிய செய்திகள்:
டோல்கேட்டில் கட்டணம் கேட்டால் அடித்து உதையுங்கள்:ராஜ்தாக்கரே அதிரடி உத்தரவு

மராட்டிய மாநிலம் மும்பையை இணைக்கும் சாலைகளில் 5 இடங்களில் டோல்கேட்கள் உள்ளன. இந்த டோல் கேட்களில் ஆண்டு தோறும் 200 கோடி ரூபாய்க்கு மேல் சுங்க கட்டணம் வசூல் ஆகிறது.கடந்த 2012–ம் ஆண்டு டோல்கேட்களில் கட்டணம் வசூல் செய்வதற்கு மராட்டிய நவநிர்மான் கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ராஜ்தாக்கரே கட்சியினருக்கும் டோல்கோட் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டபடி இருந்தது.

கடந்த வாரம் கோல்காபூர், டோம்பிவா, தானே புறநகர் பகுதிகளில் உள்ள டோல்கேட் ஊழியர்களுக்கும், ராஜ்தாக்கரே கட்சிக்காரர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டோல் கேட்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த நிலையில் ராஜ்தாக்கரே தன் கட்சிக்காரர்களுக்கு நேற்று ஒரு உத்தரவை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

டோல்கேட்களில் வரும் பணத்தை அரசு தவறாக பயன்படுத்துகிறது. அதற்கு கணக்கு இல்லை. அதிக பணம் வசூலித்து விட்டு, குறைந்த வருவாய் கிடைப்பதாக சொல்கிறார்கள்.இனி மராட்டியம் மாநிலத்தில் எந்த ஒரு இடத்திலும் டோல் கேட்டில் வரி வசூல் செய்ய அனுமதிக்காதீர்கள். டோல்கேட்டில் உங்களிடம் கட்டணம் கேட்டால் உடனே அடித்து உதையுங்கள்.

பணம் கேட்பவர்களை விரட்டி அடியுங்கள். பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.இவ்வாறு ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.இதனால் மராட்டியத்தில் டோல்கேட் ஊழியர்களிடம் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்