முக்கிய செய்திகள்:
மக்கள் ஆதரவு மற்றும் கடவுள் அருளால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- மணீஷ் திவாரி

பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பா.ஜனதா கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பை பொய்யாக்கி காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும். பா.ஜனதா எதிர்க்கட்சியாக அமரும் என மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறினார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறியதாவது,மக்கள் ஆதரவு மற்றும் கடவுள் அருளால் காங்கிரஸ் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி ஆட்சியை பிடிக்கும். அதன் பிறகு, பா.ஜனதா பிரதம வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மோடி நிரந்தமாக எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டியதுதான்.

மக்கள் மற்றும் தொழில்துறையில் குஜராத் மாநிலத்தை ஒப்பிடுகிறார்கள். அங்கு 5 அல்லது 6 கோடி மக்கள் பின்தங்கிய நிலையில் சில முதலாளிகள் மட்டுமே பயன் அடைகிறார்கள. குஜராத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும்போது அவர்கள் நினைப்பது எப்படி சரியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்