முக்கிய செய்திகள்:
டெல்லி மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் அதிகரித்துள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் அதிகரித்தப்படி உள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் ஊழல்வாதிகள் என்று கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வருவது காங்கிரசாரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டெல்லி மாநிலத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவு தலைவராக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீர் ரஞ்சனை நியமனம் செய்ய வேண்டும் என்று முதல்–மந்திரி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.

மேலும் இதுதொடர்பாக மத்திய உள்துறைக்கு கடிதமும் எழுதினார்.ஆனால் கெஜ்ரிவால் கோரிக்கையை ஏற்க மத்திய உள்துறை மந்திரி சுசீல்குமார் ஷிண்டே மறுத்து விட்டார்.

கெஜ்ரிவால் சொன்ன நபர்களை அவர் பதவியில் அமர்த்தவில்லை. காங்கிரசுக்கு ஆதரவான போலீஸ் அதிகாரிகளை ஷிண்டே முக்கிய பொறுப்புகளில் நியமித்துள்ளார்.

போலீஸ் அதிகாரி நியமன விஷயத்தில் ஆம் ஆத்மி கோரிக்கை ஏற்கப்படாததால், டெல்லி மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறை, குடிநீர் வாரியம், விளையாட்டுத் துறை ஆகியவற்றில் நடந்த ஊழல்களை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார்.

இதற்கான ஆவணங்களை கூட அவர் பார்த்து விட்டார். ஆனால் அந்த ஊழல்களை கெஜ்ரிவால் இஷ்டப்படி விசாரிக்க முடியாத வகையில் போலீஸ் அதிகாரிகள் நியமனத்தில் அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்