முக்கிய செய்திகள்:
கெஜ்ரிவால்-ஷிண்டே இடையே மோதல்

டெல்லியில் நடைபெறும் போதை மருந்து விற்பனையில் தொடர்புள்ளதாக கூறப்படும் உகாண்டா நாட்டு பெண்ணை உள்ளடக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களை கைது செய்யும்படியும் டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டார். இதனை அமல்படுத்த காவல்துறை அதிகாரிகள் மறுத்ததையடுத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முதல் அங்கு முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கெஜ்ரிவால் தனது போராட்டங்களை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி ஷிண்டே கூறியிருந்தார். இந்த கருத்துக்கு ஆவேசத்துடன் பதிலளித்த கெஜ்ரிவால், மாநில முதலமைச்சரான தனக்கு தான் போராட்டம் நடைபெறும் இடத்தை தீர்மானிக்கும் அதிகாரம் இருப்பதாக தெரிவித்தார்.

மாறாக உள்துறை மந்திரிருக்கு இதில் எவ்வித அதிகாரமும் இல்லாத போது அவர் அது பற்றி தீர்மானிக்க முடியாது என கூறினார். பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கத்தவறியதன் மூலம் நாட்டு மக்களுக்கு எதிராக அவர் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். ஷிண்டேவின் வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டதற்காக 12 காவலர்களை பணி இடை நீக்கம் செய்த அவர் பாலியல் பலாத்கார வழக்கிற்கு விசாரணை முடிந்த பின்பே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளதை கெஜ்ரிவால் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கிடையே தனது பத்து நாள் முற்றுகை போராட்டத்தை காலவரையற்ற போராட்டமாக மாற்றவும் திட்டமிட்டிருப்பதாகவும் கெஜ்ரிவால் தற்போது தெரிவித்துள்ளது மத்திய அரசுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்