முக்கிய செய்திகள்:
91 சதவீதம் ரெயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு

என்.எப்.ஐ.ஆர். ரெயில்வே தொழிற்சங்கத்தினர் சார்பில் நாடு முழுவதும் கடந்த 17 மற்றும் 18–ந்தேதி ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்று தொழிலாளர்களின் கருத்துக்களை கேட்டனர்.

சென்னை உள்ளிட்ட தெற்கு ரெயில்வேயில் நடந்த ஓட்டெடுப்பின் வாக்கு எண்ணிக்கை எஸ்.ஆர்.இ.எஸ். மத்திய அலுவலகத்தில் நேற்று நடந்தது. பதிவான 55140 ஓட்டுகளில் 54,392 தகுதியானவை. வேலை நிறுத்தம் செய்ய வலியுறுத்தி 50,449 பேரும், அதற்கு எதிராக 3943 பேரும் வாக்களித்தனர்.91 சதவீதம் பேர் வேலை நிறுத்தம் செய்ய ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவு டெல்லியில் உள்ள பெடரேசனுக்கு அனுப்பப்பட்டது.

இதற்கிடையில் 30 மற்றும் 31–ந்தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி என்.எப்.ஐ.ஆருக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பிப்ரவரியில் வேலை நிறுத்த தேதி அறிவிக்கப்படும்.

மேலும் செய்திகள்