முக்கிய செய்திகள்:
ரெயில் கட்டணம் உயர்கிறது

ரெயில் கட்டணம் கடந்த பல ஆண்டுகளாக மிக அதிக அளவில் உயர்த்தப்படவில்லை. இதனால் ரெயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.ரெயில்வேக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிகட்ட கட்டண ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்த பரிந்துரைக்கு நேற்று மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

இதன் மூலம் இனி அடிக்கடி ரெயில் கட்டணத்தை மாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது செலவுக்கு ஏற்ப இனி ரெயில் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.தற்போதைய ரூ.25 ஆயிரம் கோடி இழப்பை சரிகட்ட ரெயில் கட்டணத்தை கணிசமாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 4 உறுப்பினர்களை கொண்ட குழு இதில் இறுதி முடிவு எடுக்கும்.

மேலும் செய்திகள்