முக்கிய செய்திகள்:
அக்னி-4’ அணு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

அணு ஆயுதங்களை சுமந்தபடி 4 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பாய்ந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ‘அக்னி-4’ ரக ஏவுகணையை இன்று இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.நீண்டகால ஆராய்ச்சியின் பலனாக மூன்றாவது முறையாக நவீன தொழில்நுட்ப மேம்பாட்டுடன் தயாரிக்கப்பட்ட 'அக்னி-4' ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து இன்று காலை 10.52 மணிக்கு ஏவப்பட்டது. பரிசோதனைக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை 'அக்னி-4' வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக இந்திய ராணுவத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு குழும உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 3 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாக்குப் பிடிக்கக் கூடிய 'அக்னி-4', திட எரிப்பொருளால் இயங்கும் 2 கட்ட உந்துசக்தி கொண்டதாகும். இதே வகை ஏவுகணை கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

மேலும் செய்திகள்