முக்கிய செய்திகள்:
சுனந்தாவின் மரணம் பற்றி டாக்டர்கள் சந்தேகம்

மத்திய மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று மாலை மர்மமான முறையில் இறந்தார். டெல்லியில் அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இதற்கிடையே சுனந்தாவின் உடல் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவரது சாவு இயற்கைக்கு மாறானது என்பது தெரியவந்துள்ளது.

எதிர்பாராத, இயற்கைக்கு மாறான முறையில் சுனந்தா மரணம் அடைந்திருப்பதாகவும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும் தடய அறிவியல் துறை தலைவர் டாக்டர் குப்தா தெரிவித்தனர். இந்த காயம் காரணமாக அவர் இறந்திருக்கலாம், அல்லது வேறு காரணம் இருக்கலாம் என்று கூறிய குப்தா, மற்ற விவரங்களை தெரிவிக்கவில்லை. முழு பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாக இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என தெரிகிறது. அதேசமயம் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சுனந்தாவின் உடல் சசிதரூரிடம் ஒப்படைக்கப்பட்டு, டெல்லி லோதி சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது குடும்பத்தினர் உறவினர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் மாலையில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்