முக்கிய செய்திகள்:
அரவிந்த் கெஜ்ரிவாலை கட்டித்தழுவிய மத்திய அமைச்சர்

டெல்லியின் முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்ற பிறகும் அவரைப் பற்றிய கேள்விகளுக்கு கபில் சிபல் பதில் அளித்த போதெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தான் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், இஸ்லாம் மார்க்கத்தை தோற்றுவித்த முஹம்மது நபியின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றும் வகையில் ’மிலாடி நபி’ எனப்படும் பிறந்தநாள் விழாக்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, புது டெல்லியில் உள்ள ஷேக்கான் மசூதியிலும் இன்று மிலாடி நபி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மத்திய மந்திரி கபில் சிபல், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். முஹம்மது நபியின் நினைவாக நடைபெற்ற பிராத்தன கூட்டத்தில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

அரசியல் பகையை எல்லாம் பொருட்படுத்தாமல் மத்திய மந்திரி கபில் சிபல், டெல்லியின் முதல் மந்திரியாக பதவியேற்ற கபில் சிபலை கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.

 

மேலும் செய்திகள்