முக்கிய செய்திகள்:
மோடியுடன் சல்மான்கான் சந்திப்பு

குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் காற்றாடி திருவிழா மிகவும் பிரபலமானது.வெளிநாடுகளில் வசிக்கும் குஜராத் மக்களில் பலர் ’உத்தராயன்’ எனப்படும் இந்த காற்றாடி திருவிழாவில் பங்கேற்கவும், கண்டு களிக்கவும் தங்களின் சொந்த ஊருக்கு வந்து செல்வதுண்டு.இந்த ஆண்டின் காற்றாடி திருவிழாவை அம்மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் ’உத்தராயன்’ திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், தலைநகர் அகமதாபாத் வந்த பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், திடீர் என்று முதல் மந்திரி மோடியின் வீட்டிற்கு சென்றார். ’சல்மான் கான் என்னுடன் இன்று பகல் விருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்’ என்ற அறிவிப்புடன் அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ளார்.விரைவில் வெளியாக இருக்கும் ‘ஜெய் ஹோ’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அந்த படத்தின் கதாநாயகனான சல்மான் கான், இன்று அகமதாபாத் நகருக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும் செய்திகள்