முக்கிய செய்திகள்:
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது மந்திரிகளுடன் டெல்லி தலைமை செயலகத்தின் வாசலில் மக்கள் சபை கூட்டத்தின் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குறைகளை கூற மனுக்களுடன் குவிந்ததால் இந்த சந்திப்பின்போது எதிர்பாராத விதமாக பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது.கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கெஜ்ரிவாலை பாதுகாக்கவும் முடியாமல் டெல்லி போலீசார் திணறிப்போனார்கள்.

மக்கள் குறை கேட்கும் முகாமை சரியாக திட்டமிட்டு அரசு அதிகாரிகள் முறையாக ஏற்பாடு செய்யாததே இச்சம்பவத்துக்கு காரணம் என பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர். சமூக ஆர்வலர்களில் சிலர், 'ஒரு முதல் மந்திரிக்கு தர வேண்டிய உச்சகட்ட இசட் பிரிவு பாதுகாப்பு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வழங்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டியளித்த காசியாபாத் போலீஸ் எஸ்.எஸ்.பி. தர்மேந்திர 'எனக்கு எவ்வித பாதுகாப்பும் தேவையில்லை என்று டெல்லி முதல் மந்திரி மறுத்தாலும், அவருக்கு 24 மணி நேர இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளோம்' என்று கூறினார்.

 

மேலும் செய்திகள்