முக்கிய செய்திகள்:
நிலக்கரி ஊழல்: சி.பி.ஐ. விசாரணை முடிந்தது

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., தனியார் நிறுவனங்கள் மீது இதுவரை 14 எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. இந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது.

இவற்றில் 6 வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ. முடித்துவிட்டது. வரும் திங்கட்கிழமை தனது விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எந்தெந்த வழக்குகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை. 6 வழக்குகளையும் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் செய்திகள்