முக்கிய செய்திகள்:
மன்மோகன்சிங்குடன் ராகுல் சந்திப்பு

காங்கிரஸ் உயர் நிலைக் கூட்டம் இன்று பிரதமர் மன்மோகன்சிங் வீட்டில் நடந்தது. நிலக்கரி ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக அரசு தரப்பில் ஒப்புதல் அளித்ததால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவசரமாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமை தாங்கினார். பிரதமர் மன்மோகன்சிங், துணைத் தலைவர் ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், சுசீல்குமார் ஷிண்டே, அகமது படேல், கபில்சிபல், நாராயணசாமி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஊழலுக்கு எதிராக மேலும் சில புதிய மசோதாக்களை கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வர வேண்டிய திட்டங்கள் பற்றியும் பேசப்பட்டது.

இந்த கூட்டம் தொடங்குவதற்கு சுமார் 45 நிமிடத்துக்கு முன்பே ராகுல், பிரதமர் மன்மோகன்சிங் வீட்டுக்கு வந்தார். அங்கு பிரதமரும், ராகுலும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

சுமார் 30 நிமிடம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.

 

மேலும் செய்திகள்