முக்கிய செய்திகள்:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறு நடந்து இருக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ஒப்புதல்

மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்தது. 57 சுரங்கங்கள் முறைகேடாக ஒதுக்கப்பட்டதில் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் நடந்து வருகிறது. பெரும்பாலான வழக்குகளில் தனியார் நிறுவனங்கள் சிக்கியுள்ளன.இது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஆர்.எல்.லோதா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு நடந்து வருகிறது.

இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறு நடந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி தெரிவித்தார்.

மேலும் அவர் வாதாடும் போது, மின் உற்பத்தியை பெருக்குவதற்காக ஒதுக்கீட்டு விதிகளை மாற்றி இருக்கலாம். நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் இன்னும் நேர்த்தியாக நடந்து இருக்க முடியும். ஆனால் நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகள்