முக்கிய செய்திகள்:
இலங்கை தமிழர்களின் உரிமையை விட்டுத்தர இந்திய அரசு அனுமதிக்காது:மன்மோகன்சிங்

பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நலனில் நாங்கள் அக்கறை காட்டவில்லை என கூறுவதில் உண்மை இல்லை.

தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளை கவனிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்த தொடர்ந்து முயற்சிகள் எடுத்து உள்ளோம். நாங்கள் அதைத் தொடருகிறோம். எதிர்காலத்திலும் இந்த முயற்சி தொடரும்.

தமிழக மீனவர்கள் பிரச்சினையை எண்ணிலடங்கா முறை இலங்கை அரசிடம் எடுத்துச்சென்றுள்ளோம்.இலங்கைவாழ் தமிழ் மீனவர்களும், தமிழ்நாடு மீனவர்களும் ஒன்றாக அமர்ந்து பேசி இருதரப்பும் திருப்தி அடைவதற்கு ஏற்ற வகையில், பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். இதெல்லாம் நடக்கும் என்று நான் நம்புகிறேன். இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இது ஒன்றுதான் வழி.

தற்போது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழரின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு உள்ளது. எனவே இலங்கையில் வாழும் தமிழர்கள் இனி அச்சமில்லாமல் பாதுகாப்பான வாழ்வை வாழமுடியும் என நம்புகிறேன். அவர்களுக்கான உரிமையை ஒருபோதும் இலங்கையிடம் விட்டுத்தர இந்திய அரசு அனுமதிக்காது.இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.

 

மேலும் செய்திகள்