முக்கிய செய்திகள்:
அமெரிக்க தூதரகங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு

நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைதூதராக பணியாற்றியவர் தேவயானி கோப்ரகடே. இவர், விசா விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்ததாகவும், இந்தியாவில் இருந்து அழைத்து வந்த பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு மிகக்குறைந்த சம்பளம் அளித்ததாகவும் அமெரிக்க போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இதையடுத்து, தேவயானி கைது செய்யப்பட்டார்.இதனால் இந்தியாவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

தேவயானி கைதுக்கு பழி வாங்கும் பாணியிலான இந்தியாவின் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "இது நாங்கள் எதிர்பாராத ஒன்று" என கூறினார்.

இதற்கிடையில்,டெல்லியில் உள்ள அமெரிக்க உயர் தூதரகத்தில் நடைபெற்று வரும் அசைவுகளை இந்திய அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அமெரிக்க தூதரகத்தில் அரசின் முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டு படங்கள் திரையிடப்படுகின்றன என்பது தெரிய வந்தது. குறிப்பிட்ட சில அழைப்பாளர்கள் மட்டுமே இந்த திரைப்படங்களை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

இப்படி அனுமதி பெறாமல் சினிமாக்களை திரையிடக் கூடாது என டெல்லியில் உள்ள அமெரிக்க உயர் தூதரகத்துக்க்கு மத்திய அரசு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய அரசின் முன் அனுமதி பெறாமல் டெல்லியில் உள்ள அமெரிக்க உயர் தூதரகத்தில் சினிமா படங்களை திரையிடுவதை வரும் 20-ம் தேதிக்குள் நிறுத்த வேண்டும். 21-ம் தேதிக்கு பின்னரும் இவ்வாறு திரையிடப்படும் சினிமாக்களின் படச்சுருள்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.

 

மேலும் செய்திகள்