முக்கிய செய்திகள்:
பிரணாப் முகர்ஜி லோக்பால் மசோதாவுக்கு ஒப்புதல்

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு வலுவான அமைப்பை உருவாக்க வகை செய்யும் லோக்பால் மசோதா கடந்த மாதம் 17-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேறியது.

திருத்தப்பட்ட இந்த மசோதா மறுநாள் மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து மக்களவை தலைவர் மீரா குமார் கையெழுத்திட்ட லோக்பால் மசோதாவின் நகல், சட்டத்துறை அமைச்சகத்திற்கு நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறிய இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்தார்.

லோக்பால் இப்போது சட்டமாகியிருப்பதன்மூலம் ஊழல் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக லோக்பால் அமைப்பு உருவாக்கப்படும். ஒரு வருடத்திற்குள் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும்.

 

மேலும் செய்திகள்