முக்கிய செய்திகள்:
ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது மத்திய அரசு

இத்தாலி நாட்டு பாதுகாப்பு துறை உற்பத்தியாளரான பின்மெக்கானிக்காவுடன் இணைந்து 12 விவிஐபி ஹெலிகாப்டர் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவ்விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, பாதுகாப்பு அமைச்சகம் ஹெலிகாப்டர் கொள்முதலை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தது.ஆனால் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என அந்நிறுவனம் கூறியுள்ளது.

அந்நிறுவனம் தாங்கள் ஏற்கனவே வழங்கியுள்ள 3 ஹெலிகாப்டர்களுக்கான தொகையை வழங்குமாறும் இந்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.முன்னதாக விமானப்படை பிரிவின் தலைவரான எஸ்.பி.தியாகிக்கு இவ்விவகாரத்தில் தொடர்பிருப்பதாக சி.பி.ஐ கூறியிருந்தது. மொரிஷிய நாட்டின் வழியாக அவருக்கு லஞ்சப்பணம் பறிமாறப்பட்டதாகவும் சி.பி.ஐ மேலும் கூறியுள்ளது.

சி.பி.ஐ-ன் இந்த குற்றச்சாட்டை தியாகி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த ஒப்பந்தம் முழுவதையும் ரத்து செய்து பாதுகாப்பு அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங்கும், பாதுகாப்புத்துறை மந்திரி அந்தோணியும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் செய்திகள்