முக்கிய செய்திகள்:
புத்தாண்டு நாளான இன்று ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்

டெல்லி மாநில சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்றைய முதல் நாள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.இடைக்கால சபாநாயகராக தேர்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் மட்டீன் அகமது, கெஜ்ரிவால் உள்பட அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினருக்கான உறுதிமொழி ஏற்றனர்.

ஏழு நாள் நடக்கவிருக்கும் இக்கூட்டத்தில் நாளை தனது பெரும்பான்மையை கெஜ்ரிவால் நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மைக்கு 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் அக்கட்சிக்கு 28 உறுப்பினர்கள் பலம் மட்டுமே உள்ளது. காங்கிரஸ் கட்சியின் எட்டு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் கெஜ்ரிவால் பெரும்பான்மையை நிரூபிப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது என தெரிகிறது.அக்கட்சியின் எம்.எல்.ஏ வான எம்.எஸ்.திர் சபாநாயகராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இம்மாதம் 6-ந்தேதி சட்டமன்றத்தில் துணை நிலை ஆளுநர் நஜிப் ஜங் உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்