முக்கிய செய்திகள்:
சமையல் சிலிண்டர்களின் எண்ணிக்கை உயர்கிறது மத்திய அரசு

மத்திய அரசு ஒரு ஆண்டுக்கு மானிய விலையில் 6 சமையல் கியாஸ் சிலிண்டர்களே வழங்கப்படும் என்று அறிவித்தது

மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதால் சிலிண்டர்களின் எண்ணிக்கை 6–ல் இருந்து 9 ஆக உயர்த்தப்பட்டது.

சமீபத்தில் ராகுல்காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் முதல்–மந்திரிகள் ஆலோசனை கூட்டத்திலும் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது பற்றி பேசப்பட்டது.

அப்போது 12 மாநில காங்கிரஸ் முதல்வர்களும் மானிய விலையில் 12 சிலிண்டர்கள் கொடுத்தால்தான் நடுத்தர குடும்பத்து மக்கள் திருப்தி அடைவார்கள் என்று வலியுறுத்தினார்கள்.

இதை ராகுலும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. எனவே மானிய விலையில் 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் செய்திகள்