முக்கிய செய்திகள்:
ராகுல் காந்தி வீடு முற்றுகை

இமாசலபிரதேசத்தில் காங்கிரஸ் முதல்-மந்திரி வீரபத்ர சிங் லஞ்சம் பெற்றதாக பா.ஜனதா புகார் கூறியுள்ளது.இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு அருண்ஜெட்லி கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள வீரபத்ர சிங், இதுதொடர்பாக பிரதமர் விசாரணைக்கு உத்தரவிட்டால் எந்த விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் சவால் விட்டிருந்தார். அவர் மீதான குற்றசாட்டுகளை காங்கிரஸ் கட்சியும் மறுத்துள்ளது. குற்றச்சாட்டுக்கான ஆதாரம் இருந்தால் கோர்ட்டையோ அல்லது பொருத்தமான விசாரணைக்குழுவையோ பா.ஜனதா அணுகலாம் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

இந்நிலையில், வீரபத்ர சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இன்று டெல்லியில் ராகுல் காந்தியின் வீட்டிற்கு எதிரில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜனதா தலைவர் அனுராக் தாக்கூர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு காங்கிரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ராகுல்காந்தியின் வீட்டிற்கு வெளியில் போலீசார் அமைத்திருந்த தடுப்பு வேலிகளைத் தாண்ட முயற்சித்தனர். இதையடுத்து போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்களைக் கலைத்தனர். தடியடியும் நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.

 

மேலும் செய்திகள்