முக்கிய செய்திகள்:
திருப்பதி கோவிலில் நாளை தரிசனத்திற்கான கூடுதல் நேரம்

புத்தாண்டு தினமான நாளை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு  அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.புத்தாண்டு தினத்தை யொட்டி நாளை அதிகாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. 2 மணி முதல் 3 மணி வரை வி.ஐ.பி.க்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின் சாதாரண பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பக்தர்கள் இடைவிடாமல் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு வசதியாக அனைத்து கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை முதல் இரவு வரை 21 மணி நேரம் பக்தர்கள் இடைவிடாமல் தரிசனம் செய்யலாம்.

ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் இன்றே திருமலையில் குவிய தொடங்கி விட்டனர். 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் இன்று பிற்பகல் முதல் வழங்கப்படுகிறது. தர்ம தரிசன பக்தர்கள் மாலை 5 மணி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.விழாவையொட்டி கோவில் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

திருமலையில் கோவிலுக்குள்ளும், சுற்றுப்புற பகுதிகளிலும் மற்றும் நான்கு மாட வீதிகளிலும் தற்போது 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இருந்தாலும் அலிபிரி சோதனை சாவடியில் இருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி அலிபிரியில் இருந்து திருமலைக்கு வரும் 4 மலைப்பாதையிலும் சுமார் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. ரூ.69 கோடி செலவில் இந்த பணி நிறைவேற்றப்படும்.

இந்த கேமராக்கள் மூலம் திருப்பதி முதல் திருமலை வரையுள்ள அனைத்து பகுதிகளும், 24 மணி நேர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.

 

மேலும் செய்திகள்