முக்கிய செய்திகள்:
டெல்லியில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் கைது

இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள சூழலில் டெல்லி மாநில போலீசாருக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் அங்கு முகாமிட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இக்கடத்தல் கும்பல் தெற்கு ஆசிய நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும் தளம் அமைத்து செயல்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை வைத்து அவதார் சிங் என்ற நபரை கைது செய்தது. 10 நாட்களுக்கு முன் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை கைது செய்த டெல்லி போலீசார் அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்பிலான 9 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்திருந்தனர்.

அவர்கள் மூவரும் கொடுத்த தகவலின் பேரிலேயே அவதார் சிங் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. அவன் பயணம் செய்த சாண்ட்ரோ காரை சோதனை செய்த போது 32 கிலோ ஹெராயினும், 2 கிலோ கோகெய்னும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவனிடம் நடத்தபட்ட விசாரணையில் அவனது வீட்டில் மேலும் 6 கிலோ ஹெராயின் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

போதை தடுப்பு சிறப்பு பிரிவின் முக்கிய சாதனையாக இது கருதப்படுகிறது. கைதானவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவுக்குள் எப்படி போதை பொருட்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன என்றும் இக்கடத்திலில் ஈடுபடும் முக்கிய நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் செய்திகள்