முக்கிய செய்திகள்:
ஆம்ஆத்மி கட்சியில்:லால்பகதூர்சாஸ்திரி பேரன்

முதல்–மந்திரி கெஜ்ரிவாலுக்கும் நாடு முழுவதும் இருந்து பொது மக்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார்.

இவர் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சம்பளம் பெற்று வந்தார். அந்த பணியில் இருந்து விலகி தற்போது இக்கட்சியில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றி யையும் தெரிவித்துள்ளார்.

எனது தாத்தா லால் பகதூர் சாஸ்திரியின் நற்பெயரை காப்பாற்ற முயற்சி செய்வேன்.

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியின் மூலம் எனது தாத்தா லால்பகதூர் சாஸ்திரியின் உறுதிமொழி, நாணயம் மற்றும் ஒளிவு மறைவற்ற நிலையை மக்கள் உறுதி பூண்டுள்ளனர் என்பது தெள்ள தெளிவாகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்