முக்கிய செய்திகள்:
முதல் மந்திரியாக கெஜ்ரிவால் பதவியேற்றார்

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் கட்சி ஆரம்பித்த 6 மாத காலத்தில் அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.டெல்லியிலுள்ள ராம் லீலா மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ராம் லீலா மைதானத்திற்கு எந்த வித ஆரவாரமும்மில்லாமல் மெட்ரோ ரெயிலில் சாதாரண நபர் போல் பதவியேற்க கெஜ்ரிவால் சென்றது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கெஜ்ரிவாலுடன் பதவியேற்க இருந்த ஆறு அமைச்சர்களும் உடன் சென்றனர். பின்னர் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் நஜிப் ஜங் முதலில் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பின்னர் அமைச்சர்களும் பதவியேற்றனர். அதில் அம்மாநிலத்தின் வரலாற்றில் மிக குறைந்த வயதில் அமைச்சராகும் வாய்ப்பை பெண் சட்டமன்ற உறுப்பினரான ராக்கி சாவந்த் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.பதவியேற்பு விழா முடிந்த பின் பேசிய கெஜ்ரிவால், இது எனது பதவியேற்பு விழா, இது மக்களின் பதவியேற்பு விழா என்றும், நேர்மையாக உள்ள எவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாட்டிற்கு சேவை செய்ய முடியும் என்றும் கூறினார்.

 

மேலும் செய்திகள்