முக்கிய செய்திகள்:
பாராளமன்ற தேர்தலுக்காக புதியயூகம்:மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் தனித்து ஆட்சியைப் பிடித்த மம்தா பானர்ஜி மேற்கு வங்காள மாநிலம் மட்டும் அல்லாது வங்காளிகள் வசிக்கும் அசாம், திரிபுரா, ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் மட்டும் 42 எம்.பி. தொகுதிகள் உள்ளன. அசாமில் 14 தொகுதிகளும், திரிபுராவில் 2 தொகுதிகளும், ஒடிசாவில் 21 தொகுதிகளும், ஜார்க் கண்ட்டில் 14 தொகுதிகளும் உள்ளன. இந்த மாநிலங்களைச் சேர்த்து மொத்தம் 100 தொகுதிகளை கைப்பற்ற திரிணாமுல் காங்கிரஸ் குறி வைத்துள்ளது.இதுவரை வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கவனம் செலுத்திய திரிணா முல் காங்கிரஸ் இந்த முறை ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

இதுபற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிசிர் அதிகாரி கூறியதாவது,வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி 100 தொகுதிகளுக்கு குறி வைத்துள்ளது. இந்த முறை மேற்கு வங்காளத்தையும் தாண்டி வெளி மாநிலங்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அசாம், திரிபுராவில் எங்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. இதே போல் ஒடிசா, ஜார்க்கண்டிலும் கவனம் செலுத்த உள்ளோம். அடுத்து மத்தியில் ஆட்சி அமைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்