முக்கிய செய்திகள்:
விடுமுறை நாட்களால் திருப்பத்தில் பக்தர்கள் கூட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை, பள்ளி விடுமுறை மற்றும் இந்த ஆண்டின் இறுதி மாதம் என்பதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் திருப்பதியில் குவிந்துள்ளனர்.இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் அறைகளான வைகுண்டம் காம்ப்ளக்சின் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி உள்ளது. இதனால் 22 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையின் வழியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கான 14 அறைகளும் நிரம்பின.இதனால், நாராயணகிரி பூங்காவில் நீண்ட வரிசையில் காத்திருந்து 12 மணி நேரத்திற்கு பிறகே அவர்கள் தரிசனம் செய்தனர்.

ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்கள் 8 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தற்போதைய நாட்கள் இந்த ஆண்டின் இறுதி நாட்கள் என்பதால் தொடர்ந்து புத்தாண்டு பிறந்து ஜனவரி மாதம் வரை அதிகமாக பக்தர்கள் கூட்டம் இருக்கும். இதனால் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.எனவே, சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகள்