முக்கிய செய்திகள்:
வேலை நிறுத்தத்துக்கு 96 சதவீத ரெயில்வே ஊழியர்கள் ஆதரவு

ரெயில்வே ஊழியர்களுக்கான புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 36 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக தொழிற்சங்கங்கள், ஊழியர்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களும், வாக்கெடுப்புகளும் நடத்தி வருகின்றன. இதில் 96 சதவீத ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது பற்றி அகில இந்திய ரெயில் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் ஷிவ்கேபால் மிஸ்ரா கூறியதாவது,ரெயில்வே ஊழியர்களின் 36 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்து இருக்கிறோம். நாங்கள் அரசியல் சார்ந்தவர்கள் கிடையாது. எப்போது வேலை நிறுத்தம் செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறோம். எந்த நேரத்திலும் ‘ஸ்டிரைக்’ அறிவிப்பு வெளியாகலாம்.

போராட்டத்தில் ஆதரவு கேட்டு மத்திய தொழிற்சங்கங்கள், மாநில சங்கங்களிடம் ஆதரவு கேட்டு இருக்கிறோம். எங்கள் சங்கத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 96 சதவீதம் பேர் ஸ்டிரைக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்