முக்கிய செய்திகள்:
ராம்லீலா மைதானத்தில் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா

டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக பதவியேற்க ஒப்புக்கொண்டுள்ள அர்விந்த் கெஜ்ரிவால், ஆளுநரை சந்தித்து 26-ம் தேதி பதவியேற்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

தனது பதவியேற்பு விழாவை ராம் லீலா மைதானத்தில் நடத்த விரும்புவதாகவும் அப்போது தெரிவித்துள்ளார்.

எனவே, 26-ம் தேதி நடக்கும் பதவியேற்பு விழாவை முன்னிட்டு ராம்லீலா மைதானத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அங்கு சுகாதார ஏற்பாடுகளையும், கழிப்பிட வசதிகளையும் செய்து வருவதாக டெல்லி நகராட்சியின் மக்கள் தொடர்பு அதிகாரி யோகேந்திர சிங் மன் தெரிவித்தார்.

டெல்லி தலைமைச் செயலாளர், பதவியேற்பு விழா ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக தனது பணியை இங்கு துவக்கியுள்ளது. 50 வேலையாட்களை கொண்டு மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகின்றது.

நாளை காலைக்குள் இறுதிக் கட்ட வேலைப்பாடுகள் முடிந்துவிடும். எனினும் விழா நடைபெறும் தேதி பற்றி நகராட்சி நிர்வாகத்திற்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்றும் யோகேந்திர சிங் மன் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகள்