முக்கிய செய்திகள்:
25 கோடி வாக்காளர்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும்:நரேந்திர மோடி லட்சியம்

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடெங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். இதுவரை அவர் 128 பொதுக் கூட்டங்களில் பேசி முடித்து விட்டார்.அடுத்தக் கட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 200 முதல் 250 பொதுக் கூட்டங்களில் பேச மோடி திட்டமிட்டுள்ளார். அவரை அழைத்து பொதுக் கூட்டம் நடத்த எல்லா மாநில பா.ஜ.க. தலைவர்களும் தீவிரமாக உள்ளனர்.

என்றாலும் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களின் முதல் குறி உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற பெரிய மாநிலங்கள் மீதே பதிந்துள்ளது.பா.ஜ.க.வுக்கு குறைந்த பட்சம் 200 தொகுதிகளில் வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற லட்சியத்துடன் நரேந்திர மோடி ஆதரவு திரட்டி வருகிறார். மேற்குவங்கம், கேரளா, ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று பொதுக் கூட்டங்களில் பேசவும் மோடி திட்டமிட்டுள்ளார்.

இதுவரை பொதுக் கூட்டங்கள் மூலம் சுமார் 2 கோடி பேரை மோடி சந்திதுள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்குள் சுமார் 25 கோடி வாக்காளர்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும் என்பது மோடியின் லட்சியமாக உள்ளது.உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் ஜாதி வாக்குகளே வெற்றியை நிர்ணயிப்பதாக உள்ளது. எனவே இந்த இரு மாநிலங்களிலும் ‘‘நரேந்திர மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்’’ என்ற கோஷத்தை எழுப்ப பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.

 

 

மேலும் செய்திகள்