முக்கிய செய்திகள்:
ஆம் ஆத்மி கட்சி மக்களை அணுகுவது நாடகம்:பி.ஜெ.பி குற்றசாட்டு

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் இந்த கூட்டணி முயற்சியை பா.ஜனதா கட்சியின் டெல்லி மாநில தலைவர் விஜய் கோயல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.இதுதொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் அளிக்கும் என ஷிண்டே கூறியிருப்பது, இது புனிதமற்ற கூட்டணிக்கான பேச்சுவார்த்தையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

இரண்டு கட்சிகளுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், ஆட்சியமைக்க கூடுதல் அவகாசம் எடுப்பதால் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. மேலும் கூட்டணி ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியவில்லை என்றே தெரிகிறது. காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மக்களை அணுகுவது நாடகம்” என்றார்.

மேலும் செய்திகள்