முக்கிய செய்திகள்:
‘ராம ராஜ்ஜியத்தை‘ பற்றி நரேந்திர மோடி பேச்சி

உத்திரபிரதேச மாநிலத்தில் இதற்கு முன் நடந்த பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்ட பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் ராமர் கோவில் விவகாரம் குறித்து பேசுவதை தவிர்த்து வந்தார்.இந்நிலையில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, ராமர் கோவில் விவகாரத்தை மறைமுகமாக தொட்டுப் பேசினார். வரும் பாராளுமன்ற தேர்தலில் சரியான வேட்பாளரை தேர்ந்தெடுப்பதன் மூலம் "ராம ராஜ்ஜியத்தை" மீண்டும் கொண்டு வரலாம் மேலும் இம்மாநில மக்களின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. உங்களின் முன்னோர்கள் இங்கு ராம ராஜ்ஜியத்தை நிறுவியுள்ளனர்.  ராம ராஜ்ஜியம் என்பது உங்கள் ராஜ்ஜியம். எனவே அதை மறுபடியும் நிறுவ நீங்கள் முன்வரவேண்டும்.

இங்கு இன்னும் பிரச்சினைகள் நீடித்து வருகின்றன. நீங்கள் சரியான நபரை தேர்ந்தெடுக்காததே அதற்கு காரணம். உங்களது தாயான கங்கை நதியை பாருங்கள். எவ்வளவு மாசுபட்டிருக்கிறது. குஜராத்தில் பத்து வருடங்களுக்கு முன் மாசடைந்து கிடந்த சபர்மதி ஆற்றை எங்கள் அரசு சுத்தப்படுத்தியுள்ளது. ஆனால் இங்கு கங்கை இதுவரை சுத்தம் செய்யப்படவில்லை. சுத்தம் செய்வதாகக் கூறி நிதி ஒதுக்கி அதிலும் ஊழல் செய்துள்ளனர்.

நாட்டில் ஊழலும், வேலைவாய்ப்பின்மையும், வறுமையும் தலைவிரித்தாடுவதற்கு நேரு குடும்பமும் காங்கிரஸ் கட்சியுமே முழு முதற்காரணம். மன்மோகன் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கிறார். ஆனால் எங்கள் கட்சி சாத்தியமான வாக்குறுதிகளை கொண்டே மக்களை அணுகிவருவகிறது.என்று பேசினார் மோடி
மேலும் செய்திகள்