முக்கிய செய்திகள்:
காங்கிரஸ் குறித்து லல்லு பகிரங்க பேட்டி

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் இரண்டரை மாத கால சிறை வாசத்திற்கு பிறகு இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ராஞ்சியில் இருக்கும் அவர் நாளை தலைநகர் பாட்னா செல்கிறார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் காங்கிரஸ் குறித்து கூறியதாவது:-

நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் வருவதை போல், அரசியலில் வெற்றியும் தோல்வியும் நடப்பது சகஜம்தான். டெல்லியில் ஆட்சி அமைக்கமுடியாத நிலை ஏற்படுவதற்கு அரசியல் கட்சிகளின் தவறான வாக்குறுதிகளே காரணம்.

நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைப்பேன். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. மேலும் அரசியல் நிலவரங்கள் குறித்து பாட்னாவில் தெரியப்படுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்