முக்கிய செய்திகள்:
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக ரமண்சிங் பதவியேற்பு - பாரதிய ஜனதா தலைவர்கள் பங்கேற்பு

சத்தீஷ்கர் மாநில முதலமைச்சராக 3-வது முறையாக, பாரதிய ஜனதாவைச் சேர்ந்த திரு. ரமண்சிங், இன்று பதவியேற்றார்.

சத்தீஷ்கர் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், 49 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதனையடுத்து, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், திரு. ரமண்சிங், மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, ராய்ப்பூரில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 3-வது முறையாக திரு. ரமண்சிங், முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு, சத்தீஷ்கர் மாநில ஆளுநர் திரு. சேகர் தத், பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்