முக்கிய செய்திகள்:
சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 10 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து ஜனநாயக பாதைக்கு திரும்பியுள்ளனர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 10 பேர், பிஜாபுர் நகரில், மாவட்ட காவல்துறை உயரதிகாரி முன்னிலையில் சரணடைந்தனர். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்பியுள்ள 10 பேரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்று சத்தீஸ்கர் மாநில அரசு தெரிவித்துள்ளது. சரணடைந்த 10 பேரும் மாவோயிஸ்ட் அமைப்பில் முக்கிய தளபதியாக செயல்பட்டு வந்ததுடன், பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்