முக்கிய செய்திகள்:
செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்யும் மங்கள்யான் : விண்கலத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடக்கம்

செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்யும் மங்கள்யான் விண்கலத்தின் வேகத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள் நாளை கட்டுப்படுத்த உள்ளனர்.

இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்த மங்கள்யான் விண்கலம், கடந்த நவம்பர் மாதம் 5-ம் தேதி PSLV-C25 Rockrt மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம், படிப்படியாக விலகி, கடந்த 1-ம் தேதி புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, செவ்வாய் கிரகத்தை நோக்கி செலுத்தப்பட்டது. தற்போது, பூமிக்கு அப்பால் 23 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில், செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் மங்கள்யான் விண்கலத்தின் வேகம், சற்று அதிகமாக இருப்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மங்கள்யான் விண்கலம், திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தைச் சென்றடையும் வகையில், அதன் வேகத்தை சரிபடுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக, விண்கலத்தில் உள்ள 8 சிறிய ரக Rockrt-களின் வேகத்தை மிகச் சிறிய அளவில் குறைக்கும் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். இந்தப் பணி, நாளை காலை 6.30 மணிக்கு நிறைவடையும் என மங்கள்யான் திட்ட இயக்குநர் திரு. எம். அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்